கட்டாரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை…

கட்டார் மக்கள் தொகையில் 90 வீதமாக இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிலையை மேம்படுத்துவதில் குறைபாடு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஓக்டோபர் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய சட்டங்களை அமுலாக்குவது தொடர்பில் தற்போதே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதில் தொழிலாளர் தமது தொழிலை மாற்றுவதற்கு ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை பெறுவது நீக்கப்பட்டுள்ளது.

தவிர உள்நாட்டு பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுநேர மாத தொழிலுக்கு குறைந்தது 1,000 ரியால் (275 டொலர்) சம்பளம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 1.30 டொலருக்கு நிகராகும்.