முதன் முறையாக தென்கிழக்குப் பல்கலை.யில் தத்துவ முதுமானி , கலாநிதி ஆய்வு கற்கை நெறிகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தத்துவ முதுமானி ஆய்வு மற்றும் கலாநிதி ஆய்வு பட்டபின் படிப்பு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார். பல்கலைக்கழகத் தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் திணைக்களத்தால் இந்த ஆய்வுக் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.