பட்டதாரிகளின் நியமனக் கடிதம் தொடர்பில் வெளியான தகவல்!

பட்டதாரிகளுக்குரிய நியமனக் கடிதங்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நியமனக் கடிதங்களை பட்டதாரிகள் இன்றிலிருந்து பெற்று எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்குள் தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 133 பட்டதாரிகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 35 பட்டதாரிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 47 பட்டதாரிகளும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 52 பட்டதாரிகளும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.