30 வயதிற்கு பின்னரான சரும பராமரிப்பு

முகத்தின் சரும பராமரிப்பிற்கு மிக சரியான வழி முக-பேக் போடுவதாகும். முகத்திற்கு உடனடி பளபளப்பு மற்றும் நிறத்தை அது கொடுக்கும். உறுதியான, உயிரோட்டமுள்ள சருமத்தை பெற பேஸ்பேக் போடுதல் மிக அவசியம். பேஸ்பேக் தேவைப்படும்போதெல்லாம் அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டில் நாம் தினசரி உபயோகிக்கும் தேன், முட்டை, பாதாம் எண்ணெய், கடலை மாவு, கற்றாழை போன்றவற்றை கொண்டே பேக் போடலாம். சுத்தமான, ஆரோக்கியமான, இளமையான சருமத்தை பெற வாரத்திற்கு ஒரு முறையாவது பேஸ்பேக் போட்டுக்கொள்ள வேண்டும்.