ஒரே இரவில் முகம் பளிச்சென்று தெரிய வேண்டுமா? இரவு நேர முக அழகு டிப்ஸ்

தக்காளியை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதை உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தில் தக்காளியை மசித்து அதனுடன் மஞ்சளை சேர்த்து, முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். பின்பு உறங்கி விடுங்கள். காலையில் எழுந்து முகத்தை அலசிக் கொள்ளுங்கள், சருமத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த சரும செல்கள் மற்றும் தூசுக்கள் மறைந்து சருமம் பளிச்சென்று இருக்கும். முகத்தை இளமையாகவும் வைத்திருக்க தக்காளி உதவுகிறது. சருமம் பொலிவுடனும், மினுமினுப்பு தன்மையுடனும் இருக்க மஞ்சள் உதவுகிறது.