பாட்டி வைத்திய முறைப்படி முகத்தை அழகாக வைத்துக்கொள்ள உங்களுக்கான 7 சிம்பிள் டிப்ஸ்…

கண்களை அழகாக்க: கண்கள் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமென்றால், அதற்கு வெள்ளரிக்காயை நீங்கள் உபயோகிக்கலாம். வெள்ளரியை வட்டமான துண்டுகளாக நறுக்கி கண்களில் வைத்து சிறிது நேரம் கண்களை மூடியே இருக்க வேண்டும். இது கண்களில் உள்ள கருவளையங்களை மறைத்தும், கண்களில் உள்ள சோர்வையும் நீக்கி விடும். நீங்கள் எந்த விதமான பேஷியல் செய்தாலும், இறுதியில் உங்கள் கண்களுக்கு வெள்ளரி தான் வைப்பார்கள். காரணம் வெள்ளரியில் உள்ள ஏராளமான சத்துக்கள் , கருவளையங்களை மறைத்து விடும் .