நாமே தமிழர்களின் குரல் – வியாழேந்திரன் வீராப்பு

கிழக்கு தமிழர்களின் பலமான குரல் தாம் மாத்திரமே என்று இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் துறைநீலாவணையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால் தான் வென்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம். நாம் யாரென்று மக்களுக்கு தெரியும். எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தளவிற்கு உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். இருக்க இருக்க எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்று கொண்டிருக்கின்றது.