விரதம் – ஒரு விஞ்ஞான ரீதியான பார்வை

விரதம் என்பது வெறுமனே சாப்பாட்டைத் தவிர்க்கும் விடயம் மட்டுமல்ல. வயிரோடு சேர்த்து மன உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுப்பதுதான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம் என்று சொல்லி வெளி வேலைகளை வைத்துக்கொண்டு அலைவதும், தொலைக்காட்சி பார்ப்பதும் மிகவும் தவறானது. அது எதிர்மறையான பலன்களைத்தான் தரும் விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரைக் கலந்தாலோசித்து, உடல் நலத்தைப் பரிசோதித்த பிறகும், எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டும் ஆரம்பிப்பதே சரியானது.